அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி தொடர்பில் இலங்கை மத்திய வங்கி நிதியமைச்சிற்கு அறிவிப்பொன்றை வழங்கியுள்ளது.
அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி
அதன்படி அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை மேலும் மட்டுப்படுத்துமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், எதிர்வரும் காலங்களில் அந்நிய செலாவணி நெருக்கடி மோசமடையக்கூடும் என்பதால் அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை மேலும் மட்டுப்படுத்த வேண்டும்.
நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு மீதான தாக்கம் எதிர்காலத்தில் தொடர்ந்து அடக்குமுறையை ஏற்படுத்தும் என்பதால் இறக்குமதி தடையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
எரிபொருள், மருந்து மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு டொலர்கள் தேவைப்படுவதால், அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கடுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2500 இற்கும் மேற்பட்ட அத்தியாவசியமற்ற பொருட்கள்
இதன்படி, இறக்குமதி மட்டுப்படுத்தப்பட வேண்டிய அத்தியாவசியமற்ற பொருட்களின் மூன்று பட்டியல்களையும் மத்திய வங்கி அனுப்பியுள்ளது. அத்துடன் 2500 இற்கும் மேற்பட்ட அத்தியாவசியமற்ற பொருட்கள் இதில் உள்ளடங்குவதாக தெரியவருகிறது.
இதேவேளை, திறந்த கணக்கு முறையின் கீழ் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் பொருட்களை விற்பனை செய்த பின் பணமாக செலுத்துவதற்கும் தற்காலிகமாக தடை விதிக்குமாறும் மத்திய வங்கி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.




















