சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழு எதிர்வரும் 24 ஆம் திகதி கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ளது. இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக அவர்கள் வருகை தரவுள்ளனர்.
24 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் பொருளாதார மற்றும் நிதி சீர்திருத்தங்கள், கொள்கைகள் குறித்து ஆராயவுள்ளன.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தூதுவர் பீற்றர் புருயர் மற்றும் இலங்கை குழுவின் தலைவர் மசாஹிரோ நொசாகி ஆகியோர் தலைமையில் இந்தக் குழு வழிநடத்தப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.