கனடாவிற்கு சீனா, அரசாங்கம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
தாய்வான் விவகாரங்களில் கனடா தேவையின்றி தலையீடு செய்தால், பலவந்தமான நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் என சீனா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
வர்த்தக உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் கனடாவின் நாடாளுமன்ற குழுவொன்று இந்த ஆண்டு இறுதியில் தாய்வானுக்கு விஜயம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தகவலைத் தொடர்ந்து சீனா இந்த கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஒரே சீனா என்ற கொள்கையை அமுல்படுத்தும் சீனர் தாய்வானை தனது நாட்டின் ஒர் பகுதி என அறிவித்து வருகின்றது.
இந்த பின்னணியில் வெளிநாட்டு பிரதிநிதிகள் நேரடியாக தாய்வானுக்கு விஜயம் செய்வதனை சீனா எதிர்க்கின்றது.
சீனாவின் இறையாண்மை மற்றும் பௌதீக ஒருமைப்பாட்டில் தலையீடு செய்யும் எந்தவொரு நாட்டுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்பதற்கு தயங்கப் போவதில்லை என தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சுயாதீனமானது எனவும் அவர்களின் தாய்வான் விஜயத்தை தடுக்க முடியாது எனவும் கனடா தெரிவித்துள்ளது.