விக்ரமின் கோப்ரா
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், மிர்னாளினி, ஸ்ரீநிதி ஷெட்டி என பலர் நடிக்க நேற்று ஆகஸ்ட் 31ம் தேதி வெளியான திரைப்படம் கோப்ரா. விக்ரம் படம் என்றாலே அதில் ஏதாவது ஸ்பெஷல் இருக்கும்.
அப்படி இந்த கோப்ரா படத்தின் மீதும் ரசிகர்கள் பெரிய எதிர்ப்பார்ப்பு வைத்திருந்தார்கள். ஆனால் படம் கொஞ்சம் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது.
விக்ரம் ரசிகர்கள் மட்டும் அவரை படத்தை கொண்டாடி வருகிறார்கள்.
முதல் நாள் வசூல்
இப்படம் முதல் நாளில் தமிழகத்தில் ரூ. 10 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் நாட்களில் படம் கடும் விமர்சனங்களை தாண்டி எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.




















