உலகளவில் பணக்காரர் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டது. இதில், அமேசான் அதிபர் ஜெஃப் பெசோஸ் மற்றும் லூயிஸ் உய்ட்டனின் பெர்னார்ட் அர்னால்ட் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி கௌதம் அதானி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
முதல் தலைமுறை தொழில்முனைவோரான அதானி, உள்கட்டமைப்பு, சுரங்கம், எரிசக்தி மற்றும் பிற துறைகளை உள்ளடக்கிய ஏழு பொது பட்டியலிடப்பட்ட நிறுவனங்களை உள்ளடக்கிய அதானி குழுமத்திற்கு தலைமை தாங்குகிறார். இந்நிலையில், கௌதம் அதானி, 154.7 பில்லியன் டாலர் மதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். எலோன் மஸ்க் 273.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் மிகப்பெரிய பணக்காரராக உள்ளார்.
கடந்த மாதம் வெளியிடப்பட்ட உலக பணக்காரர் பட்டியலிலும் அதானி, அர்னால்ட்டை முந்தி மூன்றாவது இடத்தைப் பிடித்திருந்தார். ஆனால் ஜெஃப் பெசோஸ்க்கு அடுத்தபடியாக இருந்தார். அர்னால்டின் தற்போது மொத்த சொத்து மதிப்பு 153.5 பில்லியன் டாலர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
அது இன்று 4.9 பில்லியன் டாலர் அல்லது 3.08 சதவீதம் சரிந்துள்ளது. அதே சமயம் பெசோஸ் 49.7 பில்லியன் டாலரில் இருந்து 2.3 பில்லியன் டாலர் சரிந்து நான்காவது இடத்தில் உள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி 92 பில்லியன் டாலர் மதிப்புடன் எட்டாவது இடத்தில் உள்ளார்.