சமூக ஊடகமான ட்விட்டரில் ட்விட் செய்த பிறகு அதனை எடிட் செய்யும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
முன்னதாக பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் மாத்திரம் ட்வீட் செய்த பிறகு அதை எடிட் செய்யும் வசதி காணப்பட்டது.
ஆனால் தற்போது இவற்றை போன்று ட்விட்டரிலும் ட்வீட் செய்த பிறகு அதை எடிட் செய்யும் வசதி கொண்டு வர திட்டமிடபட்டுள்ளது.
டுவிட்டரில் எடிட்டிங் வசதி
இது மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.
இந்த கோரிக்கையை செயற்படுத்த எலான் மஸ்க், ட்விட்டரில் எடிட் ஆப்ஷன் வேண்டுமா என்பது குறித்து கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளார்.
பயணர்களுக்கு பதிவுகளை பதிவிடும் போது எழுத்து பிழைகள் இலக்கண பிழைகள் ஏற்படுவதனால் இந்த எடிட் செய்யும் வசதியை கோரி வருவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.
புதிய அம்சத்தை பெற $4.99 கட்டணமா?
ட்விட்டர் நிறுவனம் எடிட் பட்டனுக்கான சோதனையை மிக விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
ஆனால், தொடக்கத்தில் இந்த அம்சம் மாதத்திற்கு $4.99 செலுத்தும் அதன் ப்ளூ டிக் சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
பொது மக்கள் இந்த வசதியை தவறான வகையில் பயன்படுத்துகிறாரா? என்பதனை ஆராய்ந்த பின்னரே தீர்மானம் எடுக்க போவதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.