கனடாவின் பொருளாதாரம் கடந்த ஜுலை மாதம் சிறிதளவு வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்த்த அளவினை விடவும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த ஜுலை மாதம் நாட்டின் பொருளாதாரம் 0.1 வீதமாக உயர்வடைந்துள்ளது.
பணவீக்கம் காரணமாக கனேடிய மத்திய வங்கி வட்டி வீதங்களை தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லும் நிலையில் பொருளாதாரம் பின்னடைவை எதிர்நோக்கும் என எதிர்வுகூறப்பட்டது.
எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் மீண்டும் வட்டி வீதங்களை கனேடிய மத்திய வங்கி அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் நாட்டின் வருடாந்த பணவீக்க வீதம் 7 வீதாமக பதிவாகியுள்ளது. எரிவாயு, சுரங்கத் தொழில் மற்றும் எண்ணெய் போன்ற துறைகளில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
உற்பத்தி மற்றும் மொத்த விற்பனை ஆகிய துறைகளில் பின்னடைவு பதிவாகியுள்ளது.