ரஷ்யாவில் வாழ்ந்து வரும் கனேடியர்களுக்கு அவசர அறிவிப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
ரஷ்ய கனேடிய இரட்டைக் குடியுரிமை கொண்ட கனேடியர்கள் ரஷ்யாவை விட்டு உடன் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே ரஷ்ய வாழ் அமெரிக்க பிரஜைகள் குறிப்பாக இரட்டை குடியுரிமை கொண்டவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு அமெரிக்கா கோரியிருந்தது.
ரஷ்ய அரசாங்கம் இரட்டை குடியுரிமையை பொருட்படுத்தாது என கனேடிய அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
சில சந்தர்ப்பங்களில் இரட்டைக் குடியுரிமை கொண்ட கனேடிய பிரஜைகளையும் ரஷ்யா இராணுவச் சேவையில் ஈடுபடுத்தக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே உடனடியாக ரஷ்யாவை விட்டு வெளியேறுமாறு இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
இராணுவ சேவையில் ஈடுபட மறுத்தால் அவ்வாறான இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களை ரஷ்ய அரசாங்கம் தண்டிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அபராதங்களை விதிக்கவோ அல்லது சிறையில் அடைக்கவோ ரஷ்யா தயங்காது எனவும் இதனால் நாட்டை விட்டு உடன் வெளியேறுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.