திருமணம்
கோபி மற்றும் ராதிகா திருமணம் செய்ய போகிறார்கள், அந்த திருமணத்திற்கு பாக்யாவே சமையல் செய்யும் காண்ட்ராக்ட் எடுத்திருக்கிறார்.
இந்த விஷயம் பற்றி அறிந்து திருமணத்தை தடுத்து நிறுத்த கோபியின் அம்மா ஈஸ்வரி, அப்பா மற்றும் இனியா ஆகியோர் செல்கிறார்கள். ஆனால் அவர்கள் ஆட்டோவில் சென்று இறங்கும்போது கோபி சரியாக ராதிகா கழுத்தில் தாலி கட்டி முடித்திருக்கிறார்.
கோபி ஷாக்
அதை பார்த்து ஈஸ்வரி கடும் அதிர்ச்சி ஆகி ‘நீங்க நல்லா இருக்க மாட்டிங்க’ என கோபமாக பேசுகிறார். ‘அம்மா’ என கோபி இடையில் கூற.. ‘இனிமேல் என்னை அப்படி கூப்பிடாதே, உன்னை நான் தலை முழுகிவிட்டேன்’ என கடும் கோபத்துடன் சொல்கிறார்.
‘என் மருமகளுக்கும், பேர பிள்ளைகளுக்கும் நாங்க இருக்கோம்’ என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்கள். இதை சற்றும் எதிர்பார்க்காத கோபி எல்லோர் முன்பும் அவமானத்தில் நிற்கிறார்.
இதுநாள் வரை ஈஸ்வரி கோபிக்கு சப்போர்ட் செய்து வந்த நிலையில் தற்போது எதிராக மாறி இருக்கிறார். இந்த ட்விஸ்டை யாரும் எதிர்பார்க்கவில்லையே, ‘ஈஸ்வரி ராக்ஸ், கோபி shocked’ என பாக்கியலட்சுமி சீரியல் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
ப்ரோமோ இதோ