ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் மாதம் எகிப்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி, எகிப்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.
காலநிலை மாற்றத்திற்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம்
ஜனாதிபதியின் பொருளாதாரக் கொள்கைகளில் காலநிலை மாற்றத்திற்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும், இதன் ஊடாக புதிய தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றம் குறித்த செயலகம்
காலநிலை மாற்றம் குறித்த செயலகமொன்றை நிறுவுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றம் குறித்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் மற்றும் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நாசீட் ஆகியோரின் உதவியையும் ஜனாதிபதி நாடியுள்ளார் என குறித்த சிரேஸ்ட அரசாங்க அதிகாரி பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.