கர்ப்பிணி பெண்ணொருவரை கொலைசெய்து, பிறக்காத குழந்தையை அவரின் வயிற்றை வெட்டி எடுத்த யுவதி ஒருவர் கொலைக் குற்றவாளி என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
29 வயதான டெய்லர் ரெனி பார்க்கர்(Taylor Renee Parker)எனும் யுவதியே குற்றவாளியாக காணப்பட்டுள்ளார். 2020 ஒக்டோபரில், டெக்ஸாஸ் மாநிலத்தின் நியூ பொஸ்டன் நகரிலுள்ள வீட்டில் வைத்து, றீகன் மைக்கல் சிமோன்ஸ் ஹன்கொக்(Reagan Michael Simmons Hancock )எனும் 21 வயது யுவதியை டெய்லர் பார்க்கர் கொலை செய்தாரென குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
டெய்லர் ரெனி பார்க்கர்(Taylor Renee Parker) சுமார் 10 மாத காலமாக தான் ஒரு கர்ப்பிணி போன்று நடித்துவந்தார். பின்னர் றீகன் மைக்கல் சிமோன்ஸ் ஹன்குக்கை தலையில் தாக்கியும் கத்தியால் பல தவைகள் குத்தியும் கொலை செய்து, அவரின் வயிற்றை வெட்டி குழந்தையை கடத்திச் சென்றார் என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
பின்னர் அப்பெண்குழந்தை உயிரிழந்தாக தெரியவந்துள்ளது. சிமோன்ஸ் ஹன்குக்கின் 3 வயது மகளும் அவ்வேளையில் வீட்டில் இருந்ததாகவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
றீகனின் வயிற்றை வெட்டி, குழந்தையை டெய்லர் எடுத்தபோது, சிமோன்ஸ் ஹன்குக்(Reagan Michael Simmons Hancock ) உயிருடன் இருந்தார் என அரச தரப்பு சட்டத்தரணிகள் கூறினர்.
இவ்வழக்கில் டெய்லர் (Taylor Renee Parker)ரெனி பார்க் கர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அவருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கப் பட வேண்டும் என அரச தரப்பு சட்டத் தரணிகள் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.