உலகின் குறிப்பிட்ட இந்த பகுதிகளில் கடுமையான வெப்ப அலை காரணமாக மனிதர்களால் குடியிருக்க முடியாத நிலை ஏற்படும் என ஐக்கிய நாடுகள் மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வட ஆப்பிரிக்காவில் உள்ள சஹேல் பகுதி மற்றும் தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியா பகுதிகளில் அடுத்த பத்தாண்டுகளில் கடுமையான வெப்ப அலை வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் மனித சமூகம் பெரும் நெருக்கடியை எதிர்கொள்ளும் எனவும், புழங்கவே முடியாத சூழலில் அதிக உயிர் இழப்புகள் ஏற்படும் எனவும் ஐ.நா எச்சரிக்கை செய்துள்ளது.
சோமாலியா மற்றும் பாகிஸ்தானில் ஏற்பட்ட வெப்ப அலைக்கு பலர் பாதிக்கப்பட்ட நிலையில், அதன் உக்கிரம் எதிர்வரும் ஆண்டுகளில் அதிகமாக இருக்கலாம் என்றே கணிக்கின்றனர்.
மேலும், மீண்டும் மீண்டும் ஏற்படக்கூடிய வெப்பப் பேரழிவுகளைத் தவிர்க்க தீவிர நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளனர்.
மட்டுமின்றி, கடுமையான வெப்ப அலையால் வேளான் மக்கள், குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்கள் ஆகியோர் நேரிடையாக பாதிக்கப்படலாம் எனவும் நோய் மற்றும் இறப்பு விகிதம் அதிகரிக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.