பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்ட் போட்டியாளராக மைனா நந்தினி சென்றுள்ளார்.
இந்நிகழ்ச்சி தொடங்கும் முன் வியூகங்கள் அடிப்படையில் ஏராளமான பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டன.
அதில் பெரும்பாலானவர்களின் உத்தேச பட்டியலில் இடம்பெற்றிருந்த பெயர் என்றால் அது நடிகை மைனா நந்தினியின் பெயர் தான்.
ஆனால் அவர் பிக்பாஸ் துவக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை
பிக் பாஸில் நுழைந்த மைனா
மைனா நந்தினியை சர்ப்ரைஸாக பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்துள்ளனர் பிக்பாஸ் குழு.
இதன் காரணமாகத் தான் அவர் பிக்பாஸ் துவக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லையாம். ஒரு வாரம் தாமதமாக அவர் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்திருக்கிறார். இதனால் அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதேவேளை, இதற்கு முன்னர் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் நடிகையும் தொகுப்பாளினியுமான அர்ச்சனா இவ்வாறு தான் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




















