தற்போது நெல் கொள்வனவு நிறுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. நிதி ஒதுக்கீடுகள் இன்மையே தற்போதைய நிலைமைக்கு காரணம் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் நெல் கொள்வனவு செய்வதற்கு தேவையான பணத்தை வழங்குமாறு அரசாங்கம் வங்கிகளுக்கு அறிவித்திருந்த போதிலும் தற்போது நிலவும் நிதி நெருக்கடி காரணமாக அதற்கான பணத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அதன் செயலாளர் திரு.ரோஹன புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
நாட்டில் போதியளவு அரிசி இருப்பு இருப்பதால் எதிர்காலத்தில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இல்லை என அமைச்சு தெரிவித்துள்ளது.
சந்தையில் அரிசியின் விலை குறைந்துள்ளதைக் கருத்தில் கொண்டு, அரிசியின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த தேவைப்பட்டால், நெல் சந்தைப்படுத்தல் சபையின் கையிருப்பு அரிசியாக மாற்றப்படும் என்றும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.