கொழும்பில் இன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் அடக்குமுறை செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தியும் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்ட பேரணியும், பொதுக்கூட்டமும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அரச அடக்குமுறைக்கு எதிரான மக்கள் சக்தி
அரச அடக்குமுறைக்கு எதிரான மக்கள் சக்தி’ எனும் தொனிப்பொருளின்கீழ் முன்னெடுக்கப்படவுள்ள குறித்த எதிர்ப்பு நடவடிக்கைக்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, முன்னிலை சோசலிசக் கட்சி, சுதந்திர மக்கள் சபை, 43 ஆம் படையணி உட்பட 20 இற்கும் மேற்பட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையிலேயே மேற்படி பேரணிக்கும், போராட்டத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ள நிலையில் , திட்டமிட்ட அடிப்படையில் போராட்டம் நடைபெறும் என ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் அடுத்து என்ன நடக்குமோ என்ற பதட்டநிலை கொழும்பில் நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.