எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அப்பகுதியில் போராட்ட பகுதியில் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
அத்துடன் அப்பகுதியில் பதற்றமான சூழலே நிலவி வருவதாகவும் தெரியவருகிறது.
கொழும்பு, புறக்கோட்டை – பெஸ்டியன் மாவத்தை பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் முன்டுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்ட பேரணியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இணைந்துள்ளார்.
இந்த நிலையில் இந்த மாபெரும் போராட்டத்தில் அரசியல் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை மருதானை வீதிப்பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
கொழும்பு – மருதானை எல்பின்ஸ்டோன் திரையரங்கிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் சற்றுமுன் ஆரம்பமாகியுள்ளது.
அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படும் நிலையில் ஆர்ப்பாட்ட பேரணியாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் காரணமாக மருதானை பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை கொழும்பின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், கலகத்தடுப்பு பிரிவினர் மற்றும் பொலிஸார், படையினர் குவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பல்வேறு அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் காலி முகத்திடல் போராட்டக் குழுவின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, முன்னிலை சோசலிச கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட சுமார் 20 கட்சிகளும் 150க்கும் அதிகமான சிவில் சமுக அமைப்புகளும் பங்கேற்கவிருப்பதாக அறிவித்துள்ளன.
மேலும் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாகவோ அல்லது அருகாமையிலோ இன்று போராட்டம் நடத்த அனுமதிக்கப்படமாட்டாது என பொலிஸார் அறிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.