ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் உரிமைகளை பயன்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் இடமளிக்கவேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலிசங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தனது டுவிட்டர் பதிவில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம்
ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் ஜனநாயகத்திற்கு அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
பிரஜைகளின் உரிமைகளிற்கு ஆதரவளிப்பதற்கான தளத்தினை உறுதி செய்யுமாறு நாங்கள் இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொள்வதுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் உரிமைகளை அமைதியாக பயன்படுத்தவேண்டும் எனவும் கேட்டுகொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.