கொழும்பு – மருதானையில் ஆரம்பமான அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம், டெக்னிக்கல் சந்தியின் ஊடாக கோட்டையை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றது.
இதனால், அந்தப் பகுதியில் கடுமையான வாகன நெரிசல் காணப்படுகின்றது. சந்தைக்கு அண்மையில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம்
அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தால் மருதானை, புறக்கோட்டை பகுதியில் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் புறக்கோட்டை வீதியை பொலிஸார் வழிமறித்துள்ளனர்.
பொலிஸாருடன் விசேட அதிரடிப்படையினரும் கலகமடக்கும் பொலிஸாரும் களத்தில் குவிக்கப்பட்டுள்ளதுடன், ஆயுதமேந்திய இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன.