மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் திசைமாறி பயணித்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரொருவர் போக்குவரத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொரவெவ சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் கடமையாற்றி வரும் உத்தியோகத்தர் நேற்றிரவு (08 ) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் மொரவெவ சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் கடமையாற்றி வரும் எத்தாபெந்திவெவ பகுதியைச் சேர்ந்த எம்.கெமுனு விஜேசூரிய (42வயது) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் மது போதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது ,போக்குவரத்து பொலிஸார் குறித்த மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் குறித்த நபர் கடமையை முடித்துவிட்டு எத்தாபெந்திவெவ பகுதியிலுள்ள வீட்டுக்கு செல்வதாக பொலிஸாரிடம் கூறிவிட்டு திசை மாறி திருகோணமலை நோக்கி சென்றுள்ளார்.
இதன்போது நபரை சோதனையிட்டபோது அவர் மது போதையில் இருப்பதை அவதானிக்க முடிந்துள்ளது. இதனையடுத்து குறித்த நபரை கைது செய்து மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலை வைத்தியரிடம் பரிசோதனைகு உட்படுத்திய போது அதிஉச்ச மது போதையில் உள்ளதாக வைத்தியர் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் கைதான சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.