கிளிநொச்சியில் போதைப் பாவனைக்கு அடிமையான மகனை,பொலிஸ் நிலையத்தில் தாய் ஒருவர் ஒப்படைத்துள்ள சம்பவம் தருமபுரம் பொலிஸ் பிரிவில் இடம்பெற்றது.
வடமாகாணத்தில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்றிட்டங்கள் தீவிரமானதை அடுத்து, போதைப்பொருள் பாவனை யில் இருந்து மீள்வதற்காக மறுவாழ்வு மையத்துக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
போதைக்கு அடிமை
பெற்றோர் போதைக்கு அடிமையான தமது பிள்ளைகளை தாமாக முன்வந்து மறுவாழ்வு மையத்தில் சேர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில், தருமபுரம் பகுதியில் தாயொருவர் தனது மகனை போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் சேர்த்து மறுவாழ்வளித்து போதைப் பொருள் பாவனையில் இருந்து மீட்டுத் தருமாறுகோரி பொலிஸாரிடம் நேற்று முன்தினம் ஒப்படைத்துள்ளார்.