அவுஸ்திரேலியா சிட்னி சிறைச்சாலையில் உள்ள கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் அறிக்கையை கன்பராவில் உள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக விரைவில் பெற்றுக்கொள்ள விளையாட்டு அமைச்சு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
இதனை விளையாட்டு அமைச்சின் செயலாளர் கலாநிதி அமல் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை
சிட்னியில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுக்ஷ்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் தலைவரை தொடர்பு கொண்டு தனுஷ்கவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்ததாகவும், அவரை நேரில் சந்தித்ததன் பின்னர் அவரைப் பற்றிய முழுமையான அறிக்கையை வழங்குமாறு இலங்கை தூதரகத் தலைவருக்கு அமைச்சு அறிவித்ததுதாகவும் அவர் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாது தனுஷ்க குணதிலக்கவுடன் உயர்ஸ்தானிகராலயம் நெருங்கிய தொடர்பை பேணி வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.