ஆற்றில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை முதலை ஒன்று பெற்றோர் கண் முன்னே கவ்வி இழுத்துச் சென்று கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோஸ்டா ரிகாவின் லிமோன் பகுதியிலேயே குறித்த பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது. 8 வயதான Julio Otero முட்டளவு தண்ணீரில் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போதே குறித்த சிறுவனை முதலை ஒன்று திடீரென்று தாக்கியுள்ளது.
முதலை தங்கள் மகனை கவ்வி இழுத்துச் செல்வதை கதறியபடியே பெற்றோர் பார்த்து நின்றுள்ளனர். சிறுவனின் தாயார் மார்கினி தெரிவிக்கையில், குடியிருப்பில் தங்களால் நிம்மதியாக இருக்க முடியவில்லை, எப்போதும் மகனின் நினைவாகவே உள்ளது என்றார்.
இனிமேலும், இந்த குடியிருப்பில் தங்கினால், தங்கள் பிள்ளையின் நினைவால் சாவும் நிலைக்கு தள்ளப்படுவோம், வேறு பகுதிக்கு குடியேறுவதே நல்லது என நம்புகிறோம் என அவர் தெரிவித்துள்ளார். எஞ்சிய நான்கு பிள்ளைகளுடன் நிகரகுவா செல்லவும் அந்த தம்பதி தற்போது முடிவு செய்துள்ளது.