தென்னை உற்பத்தி இந்த ஆண்டு 20 சதவீதம் குறைவதுடன் மூன்று ஆண்டுகளில் 30 சதவீதம் குறையும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தென்னை உற்பத்தியாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் தீபால் மேத்யூ இதனை தெரிவித்துள்ளார்.
அது மட்டும் அன்றி தென்னை உற்பத்தி மோசமான நிலையில் உள்ளதகாவும் இதற்க்கு மேலும் பல பிரச்சைனைகள் வரலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகாலக உரம் இல்லாததால் உற்பத்தியில் 50 வீதம் குறையும் என்று எதிர் பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உரங்கள் இன்று கிடைத்தாலும், தற்போதைய விலையில் அவற்றை பயிருக்கு பயன்படுத்த முடியாத நிலை இருப்பதால், இரசாயனங்களுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையில், தென்னை இலையின் அடிப்பகுதியில் காணப்படும் பூச்சிகளால் பரவும் வெள்ளை இலை நோய்க்கு சிகிச்சையளிப்பது கடினம், ஏனெனில் பரிந்துரைக்கப்பட்ட இந்த இரசாயனங்களை தெளிப்பதற்கு முறையான உபகரணங்கள் இல்லை என்றும் பேராசிரியர் மேத்யூ சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னர் அனுராதபுரத்தில் இப்பிரச்சினை கடுமையாக இருந்தது தற்போது குருநாகலுக்கும், அது பரவியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.