கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் இளைஞரொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று (15.11.2022) அதிகாலையளவில் பதிவாகியுள்ளது.
கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன் புஸ்பந்தன் (வயது 21) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
பாடசாலையில் தூக்கிட்டு தற்கொலை
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட முகமாலை பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியரொருவர் வகுப்பறைக்கு சென்று பார்த்த போது இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் சடலத்தை பார்வையிட்டுள்ளனர்.