யாழில் பிறந்து 42 நாட்களேயான ஆண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
அல்லைப்பிட்டி 2 ம் வட்டாரத்தை சேர்ந்த ராயதீபன் டேனுயன் என்ற பிறந்து 42 நாட்களேயான குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குழந்தை நேற்றிரவு பால் குடித்துவிட்டு தூங்கிய நிலையில் அதிகாலை பெற்றோர் பார்த்தபொழுது குழந்தையின் வாய், மூக்கிலிருந்து இரத்தம் வடிந்துள்ளது.
இதன்போது குழந்தையை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது குழந்தை இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேமகுமார் மரண விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.