இலங்கை சனத் தொகையில் 20 வீதமானவர்கள் 08 வருடங்களுக்குள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நீரிழிவு நோய் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நீரிழிவு நோயை முறையாகக் கட்டுப்படுத்தாவிட்டால் அது நேரடியாக கண்களையே பாதிக்கும் என தேசிய கண் வைத்தியசாலையின் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.