பிரான்ஸில் உள்ள பல பெரிய சுப்பர் மார்க்கெட்கள் பொது மக்களுக்கு சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளன.
பொது மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கும் முயற்சியில் அதிகரித்து வரும் வாழ்க்கை செலவுகள் மற்றும் அதிகரித்த பணவீக்கத்தை எதிர்த்துப் போராட உதவும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, பிரான்ஸில் உள்ள முக்கிய சுப்பர் மார்க்கெட்களில் வழங்கப்படும் சலுகைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. அதற்கமைய, டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை E. Leclerc சுப்பர் மார்க்கெட் பால், அரிசி, கோப்பி, மாவு, நெப்கின்கள் உட்பட 234 அன்றாடப் பொருட்களுக்கு பணவீக்க சலுகை வழங்கப்படுகின்றது.
லக்லேர் அட்டை வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் இது பொருந்தும். எந்தவொரு விலை அதிகரிப்பும் வாடிக்கையாளரின் லுக்லேர் சுப்பர் மார்க்கெட் அட்டை ஊடாக சலுகை விலையில் பெற்றுக் கொள்ள முடியும்.
நவம்பர் மாதம் 30ஆம் திகதி வரை Carrefour சுப்பர் மார்க்கெட் தனது சொந்த தயாரிப்புகள் உட்பட 100 க்கும் மேற்பட்ட அன்றாட தயாரிப்புகளின் விலைகளை அதிகரிக்காமல் இருக்க திட்டமிட்டுள்ளது.
இது நேரடியாகவும் ஒன்லைன் ஊடாகவும் பொருந்தும் என குறிப்பிடப்படுகின்றது. டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை, Casino சுப்பர் மார்க்கெட் பல அன்றாடப் பொருட்களின் விலையை ஒவ்வொன்றும் 1 யூரோ என்ற விலையில் குறைக்கின்றது.
சீனி, பாஸ்தா, ஷெம்போ, கழிப்பறை பேப்பர், கோப்பி உள்ளிட்ட அனைத்து வகையான பொருட்களுக்கும் இந்த சலுகை வழங்கப்படும் என சுப்பர் மார்க்கெட் அறிவித்துள்ளது.
இதேபோன்று மேலும் சில சுப்பர் மார்க்கெட்கள் தள்ளுப்படி வழங்குவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது