நாட்டின் பொருளாதார நிலையில் முன்னேற்றம் காரணமாக வர்த்தக நடவடிக்கைகளுக்கான எதிர்பார்ப்புகள் ஆங்கரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
பண்டிகைக் காலம் மற்றும் பொருளாதார நிலைமைகளில் எதிர்பார்க்கப்படும் விரிவாக்கம் காரணமாக அடுத்த மூன்று மாதங்களில் வர்த்தக நடவடிக்கைகள் அதிகரிக்கும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இருப்பினும் விநியோகத் தடைகள், அதிக நேரடி மற்றும் மறைமுக வரிகள், மூலதனச் செலவு மற்றும் உள்ளீட்டு விலைகள் ஆகியவை வணிகச் செயற்பாடுகளுக்குத் தீங்கு விளைவிப்பதாக அமைந்துள்ளது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் உற்பத்தி மற்றும் சேவைகள் ஆகிய இரண்டு நடவடிக்கைகளுக்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீடு ஒக்டோபர் மாதத்தில் குறைந்துள்ளது என்றும் இலங்கை மத்தியவங்கி குறிப்பிட்டுள்ளது.