மாங்குளம் பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில் சொகுசு வானுடன் மோட்டார் சைக்கிள் மோதி பாரிய விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்தவர் உயிரிழந்துள்ளார்.
ஒருவர் பலி
இவர் மாங்குளம் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் என தெரியவந்துள்ளது.
இதேவேளை வானில் வந்தவர்களின் சேத விபரங்கள் தொடர்பில் தகவல்கள் எதுவும் தெரியவரவில்லை.