யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் வீட்டினை சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கை பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
எதிர்வரும் 26ஆம் திகதி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினம்.
அதேவேளை எதிர்வரும் 27ஆம் மாவீரர் தினமும் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
இந்த சூழலிலேயே இவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கை பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பகுதியில் இராணுவத்தினர், பொலிஸார், புலனாய்வு பிரிவினர் பாதுகாப்பு மற்றும் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.