பொல்பித்திகம பிரதேசத்தில் கடந்த 24ஆம் திகதி மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலைசெய்த கணவர் தற்கொலை செய்ய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் மஹவ இரிபிஸ்ஸ பகுதியில் இடம் பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் மஹவ பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது
சம்பவம்
பொல்பித்திகம பிரதேசத்தில் கடந்த 24ஆம் திகதி பெண் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலைசெய்த சந்தேகநபரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நபர் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் என்பதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மஹவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.