சில இடங்களில் இன்று நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று சில பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
இன்று இரவு 10 மணி முதல் நாளை பிற்பகல் 2 மணி வரை 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதற்கமைய கடுவெல, போமிரிய, கஹந்தோட்டை, கொத்தலாவல, வெலிவிட்ட, ஹேவாகம மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.