நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலமை காரணமாக மது பாவனையாளர்கள் குறைந்துள்ள போதிலும் கலால் திணைக்களத்தின் வருமானம் அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஸ்டிக்கர் ஒட்டும் செயன்முறை
மதுபான போத்தல்களுக்கு பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டும் செயன்முறை அறிமுகம் செய்தமையை தொடர்ந்து இந்த வருமானம் அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், ஆண்டின் முதல் 10 மாதங்களில், வருமானம் 20 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அத்துடன் கிடைக்கப்பெற்ற தரவுகளின்படி, பல்வேறு காரணங்களால் மதுபான தேவை சுமார் 30 வீதத்தால் குறைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஜனவரி முதல் நாட்டில் உரிமம் பெற்ற மதுபான உற்பத்தி நிலையங்கள் பாதுகாப்பு ஸ்டிக்கர்களை ஒட்டும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என கலால் திணைக்களம் கூறியுள்ளது.
ஸ்டிக்கர்களை ஒட்டும் பணிகள் மூலம் மதுபானங்கள் மீது விதிக்கப்படும் வரிகளை அரசாங்கம் எவ்வித முரண்பாடுகளும் இன்றி வசூலிக்க முடியும் எனவும் த்திணைக்கள ஊடகப் பேச்சாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.