அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டிக்காக பத்து சர்வதேச வீரர்களுக்கு பணம் கொடுப்பதற்காக தனது முதலாளியின் கணக்கிலிருந்து 250,000 அமெரிக்க டொலர்களை திருடியதாக இலங்கையரொருவர் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
மெல்பேர்ன் பொலிஸாரால் 35 வயதான சந்தேகநபர் மீது 19 திருட்டு மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து சந்தேகநபர் நேற்று (29) மெல்பேர்ன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது போலி ஆவணங்களை தயாரித்து முதலாளியின் கணக்கில் இருந்து 250,000 அமெரிக்க டொலர்களை திருடியுள்ளதாக பொலிஸ் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.