உள்ளூராட்சி சபை தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் சட்டவிரோதமாக செயற்பட்டால், அரசாங்கத்துடன் இணையாத கட்சிகளும் ஏனைய அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து புதிய கூட்டமைப்பை உருவாக்கும் என அரசியல் வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்காக நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட தொழில் வல்லுனர்கள் பலர் ஒன்றிணைந்துள்ளதாகவும், இது தொடர்பில் எதிர்க்கட்சிகள் மற்றும் சில குழுக்களுடன் ஏற்கனவே கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்திற்கு எதிராக உருவாகவுள்ள கூட்டணி
எவ்வாறாயினும், இந்த மகா கூட்டணியில் மொட்டு கட்சியையும், ஐக்கிய தேசியக் கட்சியையும், ஐக்கிய மக்கள் சக்தியையும் இணைத்துக்கொள்வதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதன்படி, எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு அரசாங்கத்திற்கு எதிராக பாரிய கூட்டணியை கட்டியெழுப்புவதுடன் தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலும் உரிய தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.