அமெரிக்காவில் இடம்பெற்ற தீ விபத்தில் இந்திய வம்சாவளி பெண் தொழிலதிபரொருவர் உடல் கருகி பலியாகியுள்ளார்.
அமெரிக்காவின் நியூயோர்க் மாகாணம் லாங் ஐஸ்லாந்து என்ற பகுதியில் ‘டோனட்ஸ்’ இனிப்புக்கடை நடத்தி வரும் பெண் தொழிலதிபரான தான்யா பதிஜா என்ற 32 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது அதிகாலை 3 மணியளவில் வீடு திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக கூறப்படுகின்றது.
பொலிஸார் விசாரணை
இது குறித்து உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் மீட்புக்குழுவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் குறித்த பெண்ணுடன் அவரது செல்லப்பிராணியான நாயும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.