ஐஸ் என்ற செயற்கை போதைப் பொருள் கடத்தலுக்கான கேந்திர நிலையமாக இலங்கை மாறியிருப்பதாக சர்வதேச பொலிஸார் கண்டறிந்துள்ளனர். இண்டர்போல் பொலிஸார் மேற்கொண்ட லயன் ஷீப் நடவடிக்கையில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
இலங்கையை மையமாக கொண்டு 22 நாடுகளுக்கு ஐஸ் கடத்தல்
ஐஸ் போதைப் பொருள் இலங்கையை கேந்திரமாக கொண்டு 22 நாடுகளுக்கு கடத்தப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் சுமார் 500 குழுக்கள் ஐஸ் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக இண்டர்போல் செயலாளர் ஜர்ஜின் ஸ்டொக் தகவல் வெளியிட்டுள்ளார்.
ஆசியாவிலேயே அதிகளவில் ஐஸ் போதைப் பொருள் கடத்தல்கள் நடந்து வருகின்றன. இந்த போதைப் பொருள் கடத்தலுக்கு பல புதிய வழிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மனித உடலுக்கு மோசமான கேடு விளைவிக்கும் ஐஸ் தயாரிக்கப்படும் இரசாயனம்
ஐஸ் போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புயை இலங்கையை சேர்ந்த 24 போதைப் பொருள் கடத்தல்காரர்கள் வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை ஐஸ் போதைப் பொருளை தயாரிக்க பயன்படுத்தப்படும் இரசாயனம் மனித உடலுக்கு மிக மோசமான கெடுதலையும் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது.