2023 ஆம் ஆண்டு நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகம் பதிவாகும் அபாயம் இருப்பதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தை விட அடுத்த வருட ஆரம்ப காலப்பகுதியில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தேசிய அமைப்பாளர் திஸ்னக திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எனவே டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு முறையான கொள்கை ஒன்றை அரசாங்கம் உருவாக்க வேண்டும் எனவும் சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.