கிளிநொச்சி – பரந்தன் பிரதேசத்திற்கு உட்பட்ட குமரபுரம் பகுதியில் இரசாயன தொழிற்சாலைக்கான காணி எல்லையிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் நேற்றைய தினம் (21.12.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த காணிகளில் தாங்கள் நீண்ட காலமாக குடியிருந்து வருவதாக பரந்தன் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
கவனயீர்ப்பு போராட்டம்
இந்த நிலையில் தமது மாணியங்களையும் சேர்த்து, இரசாயனத் தொழிற்சாலைக்கான காணியெனத் தெரிவித்து எல்லையிடுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அத்துடன் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த வீதியை மூடியுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.