உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் நேற்று (22.12.2022) இந்த வர்த்தாமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா உள்ளிட்ட ஆணைக்குழுவின் ஐந்து பேரும் இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.
நீதிமன்றில் மனுத் தாக்கல்
இந்த வர்த்தமானியின் பிரகாரம் அனைத்து நிர்வாக மாவட்டங்களுக்கும் தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் எதிர்க்கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் ஏற்கனவே நீதிமன்றில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
எவ்வாறெனினும், தேர்தல் சட்டத்தின் பிரகாரம் எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னதாக தேர்தலை நடத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.