இலங்கை ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் நாட்டு மக்கள் திண்டாட்டத்தில் இருக்க , நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருவதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி நாடாளுமன்றத்தினால் நுவரெலியாவில் நடத்தப்பட்ட வரும் Genaral,s house பங்களாவில் புத்தாண்டு விடுமுறையில் தங்குவதற்காக அதிகளவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்டாட்டம்
அனைத்து வசதிகளையும் கொண்ட அந்த பங்களாவில் 19 அறைகள் உள்ளன. அதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஒரு நேரத்தில் 3 அறைகளை 3 நாட்களுக்காக ஒதுக்கிக் கொள்ள முடியும்.
அதேவேளை நுவரெலியாவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பங்களா நாடாளுமன்ற உறுப்பினர்களின் பயன்பாட்டிற்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது .
இந்த பங்களாவின் அனைத்து நடவடிக்கைகளும் நாடாளுமன்ற உறுப்பினர் சேவை பிரிவினாலேயே நடத்தி செல்லப்படுகின்றதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.