இடமாற்றம் தொடர்பில் தனக்கு எழுத்து மூலமாக அறிவிக்கப்படவில்லை என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மகேசனுக்கு இடமாற்றம் என ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ளது.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனிடம் தொலைபேசி மூலம் வினவிய போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
எழுத்துமூல அறிவிப்பு
எனினும் இந்த வருடத்தோடு ஓய்வு பெறுபவர்களின் இடங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட வேண்டியவர்களின் பட்டியல் ஒன்று தயாரிக்கப்படுகின்றது.
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் அந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
அதில் எனது பெயரும் அந்த பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறதே தவிர எனக்கு இடமாற்றம் தொடர்பில் எழுத்து மூலமாக அறிவிப்பு எதுவும் கிடைக்கவில்லை என மகேசன் குறிப்பிட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.



















