தேசிய லொத்தர் சீட்டிழுப்பில் முல்லைத்தீவு மாவட்டதைச் சேர்ந்த ஒருவருக்கு பெருந்தொகை பணம் கிடைத்துள்ளது.
புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் அமைந்துள்ள லொத்தர் விற்பனை முகவரிடம் அதிஷ்ட லாப சீட்டினை பெற்றவருக்கு இரண்டு மில்லியன் ரூபாய் பரிசாக கிடைத்துள்ளது.
கடந்த 23.12.2022 திகதிக்கான மகஜன சம்பத லொத்தர் சீட்டிழுப்பின் மூலம் இந்தப் பரிசுத்தொகை கிடைத்துள்ளது.
அண்மையில் யாழ்ப்பாணம் சங்கானை பகுதியை சேர்ந்த ஒருவர் லொத்தர் சீட்டிழுப்பில் 1 கோடியே 97 லட்சம் ரூபாய் கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.