உலக புள்ளிவிவரங்களின் சமீபத்திய தரவுகளின்படி, பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் உலகின் நான்காவது பணக்கார நடிகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஆசியாவின் பணக்கார நடிகர் என்ற பெருமையையும் அவர் தனதாக்கிக் கொண்டுள்ளார்.
நான்காவது இடம்
அவரிடம் 770 மில்லியன் அமெரிக்க டொலர் சொத்துக்கள் இருப்பதாக வெளியான தகவலை அடுத்தே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இந்த பட்டியலில் ஹொலிவுட் சூப்பர் ஸ்டார்களான டொம் குரூஸ், ஜாக்கி ஜான், ஜார்ஜ் குளூனி ஆகியோரை பின்னுக்கு தள்ளி நான்காவது இடத்தை பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் பிடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.