யாழ் மாவட்டத்தில் 450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 10 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளது.
இதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் இந்த விலை குறைப்பு அமுலுக்கு வரும் என யாழ்.மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் க.குணரட்ணம் அறிவித்துள்ளார்.
இதன்படி பாண் ஒன்றின் புதிய விலை 180 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.