இலங்கையில் மக்கள் மத்தியில் வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொருளாதார நெருக்கடி நிலைமைகள் மற்றும் ஏனைய பிற ஏதுக்களினால் மக்கள் மத்தியில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இளம் மற்றும் சிறுவர் உளவியல் நிபுணர் டாக்டர் பேராசிரியர் மியுரி சந்திரதாச இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மக்கள் மத்தியில் கடுமையான மனநிலை
நாட்டின் பல பகுதிகளிலும் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மக்கள் ஆக்ரோசமாக நடந்து கொள்ளும் நிலைமைகள் வெகுவாக உயர்வடைந்துள்ளது என டாக்டர் மியுரி தெரிவித்துள்ளார்.
பொருளாதார ரீதியாக மக்கள் எதிர்நோக்கி வரும் அழுத்தங்கள் உள்ளிட்ட பல காரணிகளினால் மக்கள் மத்தியில் இவ்வாறு கடுமையான மனோ நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.