மருந்து தட்டுப்பாட்டு நிலைமை தொடருமாக இருந்தால் கூடிய விரைவில் சுகாதாரத்துறை முழுமையாக வீழ்ச்சியடைந்து, இலங்கையில் அரச வைத்தியசாலைகள் மூடப்படும் நிலைமை ஏற்படலாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
அரச வைத்தியசாலைகளில் நிலவும் அத்தியாவசிய மருந்து தட்டுப்பாட்டால் அத்தியாவசிய சத்திர சிகிச்சைகளுக்கு முன்னுரிமை வழங்கி செயற்படுமாறு சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினரான வைத்தியர் வாசன் இரத்னசிங்கமே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.