பியகம பண்டாரவத்தை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற முகநூல் விருந்தொன்றை சுற்றிவளைத்து பெண் ஒருவர் உட்பட 32 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பியகம பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் நேற்று (12) காலை இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தச் சுற்றிவளைப்பின் போது கஞ்சா வைத்திருந்த 07 சந்தேகநபர்கள், போதை மாத்திரைகள் வைத்திருந்த 03 சந்தேகநபர்கள் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரும் மற்றும் சட்டவிரோத சிகரெட்க்களை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தவிர போதை மாத்திரைகளை வைத்திருந்த பெண் ஒருவர் உட்பட ஆறு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 20 முதல் 27 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் இவர்கள் மட்டக்குளி, முகத்துவாரம், வெல்லம்பிட்டிய, மருதானை, கிரேண்ட்பாஸ், பேலியகொட மற்றும் களனி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் இன்று (13) மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பியகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.