உக்ரைன் மீது போர் தொடுத்த புடின், அமெரிக்காவின் வலிமையைப் பார்த்து வருவதாக அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
உக்ரைன் தலைநகர் கீவ் விற்கு 5 மணிநேர போர்நிறுத்த காலத்தில் ரகசியமாகப் பயணித்து திரும்பிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், போலந்து நாட்டின் வார்சாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார்.
அப்போது உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவைத் தெரிவித்த அவர், அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் ரஷ்யாவைத் தாக்கத் திட்டமிட்டு வருவதாக புடின் கூறிய குற்றச்சாட்டை மறுத்தார்.
இதன்போது போரில் வீழ்த்த முடியாத அளவுக்கு உக்ரைன் சுதந்திரமாக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார்.




















