யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்றைய தினம் காலை 9 மணியளவில் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப் பிரகாசத்தினை ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமாகிய சஜித் பிரேமதாச யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள நிலையில் பல்வேறு நிகழ்சிகளிலும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும் கலந்து கொள்ளவுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று(23) காலை 10 மணிக்கு அனலைதீவிலும், மாலை 2 மணிக்கு சண்டிலிப்பாயிலும், மாலை 4 மணிக்கு வட்டுக்கோட்டை மூளாயிலும், மாலை 5 மணிக்கு அளவெட்டி கும்பலையிலும், மாலை 06.30 மணிக்கு றக்கா வீதியில் அமைந்துள்ள இளங்கதிர் சனசமூக நிலைய விளையாட்டுத் திடலில் இடம்பெறவுள்ள பொதுக் கூட்டங்களிலும் சஜித் பிரேமதாச கலந்து கொள்ளவுள்ளார்.



















